மியான்மரில் என்ன தான் நடக்கிறது?
பர்மிய இன மக்கள் அதிகமாக வாழ்ந்ததால் தற்போதைய மியான்மர் முன்பு, பர்மா என அழைக்கபட்டது.1948 ஆம் ஆண்டு ஆஙு்கில ஆதிகத்தின் பிடியிலிருந்து மியான்மர் விடுதலை பெற்று ஆங் சான் தலைமையில் ஜனநாயக ஆட்சி அமைத்தது.
ஆங் சான்(Father of Aung San Suu kyi) படுகொலைக்குப் பின்னர் வலிமையான தலைமை இல்லாத காரணத்தால் மியான்மர் இராணுவம் ஆட்சியை(Tadmadaw) கைப்பற்றியது. 1962 முதல் 2010 வரை அங்கு இராணுவ ஆட்சியே நடைபெற்றது.
இந்த சமயங்களில் ஜனநாயக ஆட்சி கோரி அநேக போராட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ஆங் சாங் சூகி கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.
2008 ஆம் ஆண்டு மியான்மர் இராணுவம் '' பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு இராணுவ உறுப்பினர்களோடு மக்களாட்சி அமைக்கலாம்'' என உடன்படிக்கை ஏற்படுத்தியது.
இதை எதிர்த்து 2011 ல் விடுதலை செய்யப்பட்ட ஆங் சான் சூகி ஆதரவு கட்சி போராடியது. ஆனால் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வேறுவழியின்றி இதே உடன்படிக்கையில் 2015 தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றது. ஆங் சான் சூகி நாட்டின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்றார்.
2017 ஆம் ஆண்டு மியான்மர் இராணுவம் நடத்திய ரோகிங்யா முஸ்லீம் இனப்படுகொலையில் ஆங் சாங் சூகி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதை சாதகமாக பயண்படுத்தி 2020 நவம்பர் தேர்தலில் இராணுவம் எதிர் கட்சி (USDP) ஆதரவுடன் வெற்றி பெற முயற்சித்தது. ஆனால் ஆங் சாங் சூகி ஆதரவு அலை ஒய்வதாக இல்லை. இம்முறை தனிப்பெறும்பான்மையுடன் வெற்றிபெற்றது.
இதை ஏற்க முடியாத இராணுவம் ஆங் சாங் உட்பட அணைத்து தலைவர்களையும் கைது செய்து வீட்டு காவலில் வைத்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இந்தியாவில் இதுபோல் வாய்ப்பு உள்ளதா?
1. மியான்மரில் உள்ளது போல் இந்தியா உட்பட எந்தவொரு நாட்டிலும் இராணுவத்திற்கென தனி இடஒதுக்கீடு கிடையாது.
2. இந்திய இராணுவம் தரைப்படை, கப்பற்படை, விமானப்படை என வேறுபட்ட ஒன்றோடொன்று பிணைந்த அமைப்பை கொண்டுள்ளது.
3. இந்தியாவில் எடுக்கும் எந்த முடிவும் பாராளுமன்ற, நீதிமன்ற மறு ஆய்வுக்கு உட்பட்டது.
இவ்வாறு மக்களாட்சி அடித்தளம் வலிமையாக அமைந்துள்ளதால் சாத்தியம் மிகக் குறைவு.
0 Comments
Pray God, Believe Jesus Christ and read bible