1. ஒரு மொழிக்கு எழுத்து வடிவம் (Script) என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவ்வாறு எழுத்து வடிவம் இல்லையென்றால் அம்மொழி வழியாக அறிவியல், கணிதம், இலக்கியம், போன்ற தகவல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியாது. எழுத்து வடிவம் இல்லாத மொழிகள் விரைவில் அழிந்து போகும்.
2. காலத்திற்கு ஏற்ப மொழி மாற்று உருவம் பெற வேண்டும். எடுத்துக்காட்டாக: விழித்து விட்டாயா? என்பது தற்போது முழிச்சிட்டியா என மாறியுள்ளது. தமிழ் காலத்திற்கு ஏற்ப மாறியதன் விளைவாக தற்போது வழக்கில் உள்ளது. சமஸ்கிருதம் அவ்வாறு மாறாததன் விளைவாக தற்போது அழியும் நிலையில் உள்ளது.
3. சரியோ தவறோ கண்டிப்பாக பேச்சு வழக்கில் இருக்க வேண்டும்.
4. மொழிக்கென்று தனி கல்லூரி ஆரம்பிக்க வேண்டும். மேலும் பல்வேறு ஆராய்ச்சிகள் வர வேண்டும்.
5. தற்போது உள்ள Digital வரவால், இணைய தகவல்கள் தம் தம் தாய் மொழியில் தட்டச்சு செய்யப்பட வேண்டும்.
6. தாய்மொழி பேசுவதை பெருமையாக கருத வேண்டும்.
7. பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும் தாய் மொழி பெயர் பலகைகள் வைக்க வேண்டும்.
0 Comments
Pray God, Believe Jesus Christ and read bible