கிறிஸ்தவ பாடல்கள் | Christian Songs

பாடல் - 1

இயேசுவை  நோக்கிப்பார்  (2)
அவரே உந்தன் இரட்சகர் இயேசு
இயேசுவை  நோக்கிப்பார்  - 2 

Look to the lamb of god (2)
For he alone is able to save you
Look to the lamb of god -2

பாடல் - 2

பாரு பாரு பாரு இயேசுவையே  நோக்கிப் பாரு
        பார்த்த முகங்கள் பிரகாசித்ததே
        பார்த்தால் நீயும் பிரகாசிப்பாயே - 2 
  Tv பாரு Net பாரு Bad Friends சொல்வாங்க
 பொழுது போகும் தொலைஞ்சி போகும்
வாழ்க்கை வீணா அழிஞ்சிப் போகும்
         வேதம் வாசித்து தினமும் ஜெபித்திடு
         இயேசு உன்னில் பிரகாசிப்பாரே - 2 

                                                - பாரு பாரு பாரு

பாடல் - 3

ஹையாரே   (6)
சந்தோஷம் சந்தோஷமே எனக்கு - 2 
இயேசுவை நான் நோக்கிப் பார்ப்பதால் எனக்கு
சந்தோஷம் சந்தோஷமே
     அன்னாள் ஜெபித்தாள் ஆண்டவரை நோக்கினாள்
     சாமுவேலைப் பெற்றுக் கொண்டாளே
     சந்தோஷம் சந்தோஷம் (2)
     கஷ்டத்திலும் நஷ்டத்திலும் கவலை சூழும் நேரத்திலும்
   இயேசுவை நான் நோக்கிப் பார்த்ததால் 
   சந்தோஷம் சந்தோஷம் (2)
                                        -ஹையாரே

பாடல் - 4


தையர தையர தையா - (4)
தாத்தா எலியா தாத்தா கர்த்தரை நோக்கிப் பார்த்தார்
வானத்தில் இருந்து அக்கினி பலிகளை பட்சிக்கக் கணடார் -2
                        -தையர தையர தையா - (4)
கர்த்தரே தெய்வம் என்று மக்கள் அறிந்தனர் அன்று
கூப்பிடு நீயும் இன்று பதில் நிச்சயம் உனக்கு உண்டு -2
                        -தையர தையர தையா - (4)


பாடல் - 5


 ஜிங்கிடி ஜக்கா ஜிங்கிடி ஜக்கா ஜிங்கிடி ஜக்கா ஹோய்
 ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜக்கா ஹோய்-(2)
              வெற்றி மேலே வெற்றி வந்து என்னைச் சேரும்
              என் இயேசுவின் பெலத்தாலே
              சாத்தானை தோற்கடிப்பேன்
              நான் ஜெயத்தைப் பெற்றிடுவேன் -2
                                                     -ஜிங்கிடி ஜக்கா
துப்பாக்கியாலே வெற்றி பெற்றானா இல்ல இல்ல இல்ல
பட்டா கத்தியாலே வெற்றி பெற்றானா இல்ல இல்ல இல்ல
             குண்டு வெடியா உன் நாட்டு வெடியா இல்ல இல்ல இல்ல
             ஒரு கூடார ஆணியால் வெற்றி பெற்றாளே
             தைரியமான யாகேல் அக்கா -2

பாரு பாரு பாரு நீ இயேசுவையே பாரு
வெற்றி மேலே வெற்றி நிச்சயம் -2
உனக்கு / எனக்கு / நமக்கு வெற்றி மேலே வெற்றி நிச்சயம்  -ஜிங்கிடி ஜக்கா 

பாடல் - 6


Ringa Ringa Roses pocket full Of Roses  (4)
          முன்னும் பின்னும் பார்த்து கிடைக்கலையே
          ஆழமாகப் பார்த்தும் கிடைக்கலையே
          சுத்தி சுத்தி பார்த்தும் கிடைக்கலையே
          ஞானம் மட்டும் கிடைக்கலையே (2)
தம்பி தங்கை வெய்ட்
          இயேசுவை நோக்கிப் பார்த்தாயா
          ஞானத்தின் ஊற்று அவர் மட்டுமே
          ஞானத்தின் அதிபதி இயேசு மட்டுமே
          அவரை நோக்கிப் பார்த்தால் பெற்றிடலாமே(2)
Ringa Ringa Roses pocket full Of Wisdom (4)

          




















      



Post a Comment

0 Comments