1996 க்கு முன்பு வரை 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி(Representation of People Act 1951) ஒருவர் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது. இதை சாதகமாக பயன்படுத்தி அடல் பிகாரி வாஜ்பாய்(3 தொகுதிகள்), இந்திரா காந்தி(2 தொகுதிகள்) போன்றோர் ஓன்றுக்கு மேற்ப்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் தோல்வி பயம்.
இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்ததால், 1996 ஆம் ஆண்டு தேர்தல் மறுசீரமைப்பு சட்டப்படி ஒருவர் பாராளுமன்ற(MP) அல்லது மாநில தேர்தல்களில்(MLA) ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டும் போட்டியிட முடியும் என வரையறுக்கப்பட்டது.
இவ்வாறு போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் ஒரு தொகுதியில் மட்டும் உறுப்பினராக இருக்க முடியும், மற்றொரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இது சரியா? தவறா?
ஒரு வாக்காளர் ஒரு தொகுதியில் மட்டும் வாக்களிக்க முடியும் என இருக்கும் போது, வேட்பாளர் மட்டும் இரு தொகுதிகளில் போட்டியிடுவது சரியல்ல.
ஏன் மாற்றம் பெறவில்லை?
இது சட்டமாக உள்ளதால், தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு சட்ட திருத்தம் கொண்டுவர பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். ஆனால் 2004 மற்றும் 2016 ல் தேர்தல் ஆணையத்தால் கொண்டுவரப்பட்ட இரு பரிந்துரைகளும் நீக்கம் செய்யப்பட்டன.
என்ன மாற்றுவழி?
ஒருவர் ஒன்றுக்கு மேற்ப்பட்ட தொகுதிகளில் மனு தாக்கல் செய்யும் போது மனுவை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.
0 Comments
Pray God, Believe Jesus Christ and read bible