இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1930-1932 வட்ட மேசை மாநாடுகளில் வகுப்பு வாரிய பிரதிநிதித்துவம்(Separate Electorate) டாக்டர் அம்பேத்கர் அவர்களால் முன்னிருத்தப்பட்டது.
இதன்படி ஒவ்வொருவருக்கும் இரண்டு வாக்குகள்(Double Vote) இருக்கும். ஒன்று பொதுத்தொகுதியில் போட்டியிடுவோருக்கான ஓட்டு, மற்றொன்று எட்டு சமுகமாக(உயர் சாதி, பிற்ப்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர், சீக்கியர், இந்திய கிறிஸ்தவர்கள், ஆங்கில இந்தியர்கள், ஐரோப்பியர்கள், தலீத்துகள்) பிரிக்கப்பட்ட சமுக ஓட்டு.
எ.கா; முஸ்லீம் வாக்காளர் ஒருவர் பொதுப்பிரதிநிதிக்கு ஒரு ஓட்டு, முஸ்லீம் பிரதிநிதிக்கு ஒரு ஓட்டு, என இரண்டு ஓட்டுகள் செலுத்த வேண்டும்.
இந்த கொள்கை இந்திய மக்களை பிரித்தாளும் செயல் என காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு மாற்றாக தனித்தொகுதி இட ஒதுக்கீடு(Reserved Constituency) முன்னிருத்தப்பட்டது. பெருவாரியான தலைவர்கள் இதை ஏற்றுக்கொண்டதால், பூனா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
யாரால் தனித்தொகுதி இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது? எதன் அடிப்படையில்?
இதற்கென தேர்தல் ஆணையத்தோடு இணைந்த எல்லை ஆணையம்(Delimitation Commission) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மக்கள் தொகையின் அடிப்படையில் தன்த்தொகுதியை நிர்ணயம் செய்கிறது.
ஒரு தொகுதியில் பழங்குடியினர் அதிகமாக இருந்தால் அங்கு போட்டியிடும் நபர் பழங்குடியினரை சேர்ந்தவராக இருக்க வேண்டும். பட்டியல் இணத்தவர்கள் நாடு முழுவதும் சமமாக பரவி உள்ளதால், சுற்று அடிப்படையில் தொகுதிகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.
2020 நிலவரப்படி பாராளுமன்ற தேர்தலில் 84 தொகுதிகள் பட்டியல் இனத்தவர்களுக்காகவும்(SC), 47 தொகுதிகள் பழங்குடியினருக்காகவும்(ST) ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 44 தொகுதிகள் பட்டியல் இனத்தவர்களுக்காகவும்(SC), 2 தொகுதிகள் பழங்குடியினருக்காகவும்(ST) ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரத்தை பின்வரும் அரசியலமைப்பு கூறுகள் வழங்குகின்றன.
சரத்து 330 - நாடாளுமன்றத் தேர்தலில் SC,ST க்கான தொகுதிகள்
சரத்து 332 - மாநில சட்டமன்றத் தேர்தலில் SC,ST க்கான தொகுதிகள்
தனித்தொகுதி(Reserved Constituency ) தேவையா?
சரத்து 334 ன் படி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனித்தொகுதி பங்கீடு மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஆனால் எந்த மாற்றமும் செய்யப்படாம் அப்படியே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதை காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி அமைக்க வேண்டும்.
1 Comments
நன்றி
ReplyDeletePray God, Believe Jesus Christ and read bible