கண் தெரியாதவர்கள் எவ்வாறு ஓட்டு போடுவது(Visually Challenged Vote)?

            கண் தெரியாதவர்கள்(Visually Impaired) வாக்கு சாவடிக்கு செல்லும் போது   தன்னுடன் துணை நபர்  (Companion) ஒருவரை அழைத்துச் செல்லலாம். அவர் அன்றைய நாளில் வேறு யாருக்கும் உடன் நபராக சென்றிருக்க கூடாது. 
            தேர்தல் அலுவலர்(Presiding Officer) முன்பு  ரகசிய காப்பு உறுதிமொழி(Declaration of Secrecy) படிவத்தை துணை நபர் நிரப்பி கொடுக்க வேண்டும். அதன் பின்னர் கண் தெரியாதவருக்கு உதவி செய்யலாம். இந்த நிகழ்வுகள் அனைத்தும் படிவம் 14A வழியாக பதிவு செய்யப்பட்ட வேண்டும். இவையே 49N விதிமுறைகள். 
            இதே விதிமுறைகள் துணை நபர் தேவைப்படும் அணைத்து மாற்று திறனாளிகளுக்கும் (Person with Disability) பொருந்தும். 
யார் பொத்தானை அழுத்துவது? கண் தெரியாதவரா அல்லது துணை நபராக? 
     பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM), Braille letter எதுவும் கிடையாது. ஆனால் தற்போதுள்ள இயந்திரங்கள் Braille letter சேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே கண் தெரியாதவரே நேரடியாக பொத்தானை அழுத்தலாம், துணை நபர் அருகில் இருந்தால் போதும். 

யாருக்கு மை வைக்க படுகிறது? 
     இருவருக்கும் மை வைக்கப்படும். கண் தெரியாதவருக்கு இடது ஆள்காட்டி விரலிலும் (Left Index Finger), துணை நபருக்கு வலது ஆள்காட்டி விரலிலும்( Right Index Finger) வைக்கப்படும். 

Post a Comment

0 Comments