சந்தேகத்தின் பேரில் ஒருவர் ஓட்டை நிறுத்தலாமா? Challenged Vote

        வாக்காளர் ஒருவர் ஆள் மாறாட்டம்(Impersonation) செய்வதாக, வாக்குச்சாவடி முகவர் (Booth Agent) ஒருவர் சந்தேகித்தால் அங்குள்ள தேர்தல் அலுவலரிடம்(Presiding Officer) புகார் அளிக்கலாம். அதற்கு சான்றாக முகவரி டம் 2 ரூபாய் பெற்றுக் கொள்ளப்பட்டு ரசீது வழங்கப்படும். இது ஆட்சேபனை ஓட்டு(Challenged Vote) எனப்படுகிறது
இதுகுறித்து தேர்தல் அதிகாரி புகாருக்குள்ளான நபர் குறித்து விசாரணை நடத்துவார். 

சரியான வாக்காளராக இருந்தால் என்ன நடக்கும்? 
            வாக்காளரின் விவரங்கள் படிவம் 14 ல் நிரப்பப்பட்ட பின் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார். முகவரிடம் பெறப்பட்ட இரண்டு ரூபாய் அரசுக்கு செலுத்தப்படும். 

ஆள்மாறாட்டம் செய்திருந்தால் என்ன நடக்கும்? 
            சம்பந்தப்பட்ட நபர் காவல் அதிகாரியிடம் ஒப்படைக்கப் படுவார். முகவரிடம் பெறப்பட்ட இரண்டு ரூபாய் திருப்பி செலுத்தப்படும். 

முகவர் எத்தனை புகார் அளிக்கலாம்? 
            இதற்கு அளவு கிடையாது, ஆனால் வேண்டுமென்றே காலத்தை விரையமாக்க புகார் அளிப்பாரானால் காவல் அதிகாரி உதவியுடன் முகவர் அங்கிருந்து அகற்றப்படுவார். 

Post a Comment

0 Comments