முப்படை பணியாளர்களுக்கு தேர்தலில் சிறப்பு அந்தஸ்து ஏன்? Proxy Vote

            இந்திய  இராணுவப்படை (Army), கப்பற்படை (Naval), விமானப்படை (Air Force) பணியாளர்களுக்கு தபால் ஓட்டு தவிர, பதிலி ஓட்டு (Proxy Vote) என்ற சிறப்பு வழங்கப்பட்டுள்ளது. 
            இதற்கு காரணம், இராணுவ வீரர்கள் எல்லையில் பணி புரியும் போது தபால் ஓட்டு போட கூட வாய்ப்பு அமையாமல் போகலாம். அதை தவிர்க்க முன்னதாகவே படிவம் 13 ஐ நிரப்பி தனக்கான பதிலி வாக்காளரை (Proxy Voter) முன்னதாக நியமித்து கொள்ளலாம். 

            இந்திய இராணுவ சட்டம் 1950( Indian Army act) யார் யார் இந்த இதற்கு தகுதி என வரையறுக்கிறது. இவர்கள் வரையறுக்கப்பட்ட பணியாளர் வாக்காளர் (Classified Service Voters) எனப்படுகிறார்கள். 

            எல்லா வாக்கு சாவடியிலும் பதிலி வாக்காளர்கள் (Proxy Voters)  என்ற பதிவேடு முன்னதாகவே தயார் பண்ணப் படுகிறது. இவர்களுக்கு இடது நடு விரலில் மை வைக்கப்படுகிறது. 


 

Post a Comment

0 Comments