கள்ள ஓட்டுகள் என்னப்படுமா? Tendered Vote

            ஒருவர் வாக்களிக்க வரும் போது, அவருடைய ஓட்டு முன்பே வேறு ஒருவரால் பதிவு செய்யப்பட்டது அதாவது கள்ள ஓட்டு என கண்டறியப்பட்டால், வாக்காளரின் சான்றுகள் ஆய்வு செய்யப்படுகிறது. அது சரி என்று உறுதி செய்யப்பட்டால் வாக்குசீட்டு(Ballot Paper) ஒன்று கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார். பொதுவாக இவர்கள் EVM இயந்திரத்தில் ஓட்டு போட அனுமதிக்கப்படுவதில்லை. 

            இது குறித்த தகவல்கள் படிவம் 17B ல் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கான அதிகாரத்தை இந்திய அரசியல் சட்டம் ( Indian Election Law) 49P வழங்குகிறது. 

இந்த ஓட்டுகள் என்னபப்டுமா? 
            ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் போது எதாவது ஒரு வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதாக இருந்தால் இந்த வாக்குசீட்டு (Ballot Paper) ஓட்டுகள் எண்ணப் படுவதில்லை. கிட்டத்தட்ட 50 முதல் 100 ஓட்டுகளே வித்தியாசம் என்றால் இவைகள் எண்ணப்படுகிறது. 

ஏன் EVM  இயந்திரத்தில் வாக்களிக்க முடியாது? 
            வாக்கு சாவடியில் ஓட்டு நிறைவு பெறும் போது மொத்தம் உள்ள வாக்காளரின் எண்ணிக்கை, EVM இயந்திரத்திர எண்ணிக்கையோடு ஒத்துப்போக வேண்டும். அதாவது 70 வாக்காளர்கள் என்றால் 70 பதிவுகள் EVM இயந்திரத்தில் இருக்க வேண்டும். இல்லை என்றால் முழு வாக்குசாவடி ஓட்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இது போன்ற குளறுபடிகளை தவிர்க்க தனியாக பதிவு செய்யப்படுகிறது. 

Post a Comment

0 Comments