NEET தேவையா? Is NEET necessary?

 கல்வியை நிர்ணயிப்பது மத்திய அரசா? மாநில அரசா? 

       1976 ஆம் ஆண்டு மாநிலப் பட்டியலில் (state list) இருந்த கல்வியானது, பொதுப்பட்டியலுக்கு(concurrent list) மாற்றப்பட்டது. அதன் பிறகு கல்வி தொடர்பான அனைத்து சட்ட திட்டங்களிலும், மத்திய அரசின் கையே மேலோங்கி நிற்கும். இதை வைத்து தான் மத்திய அரசு நீட் தேர்விலும் மாற்றம் கொண்டு வருகின்றன. 

ஒரே தேர்வு முறை சரிதானா? 

          இந்தியா முழுவதிலும் உள்ள கிட்டத்தட்ட 50 வகையான மாநில மருத்துவ நுழைவுத்தேர்வை முறைப்படுத்துவதாக கூறி 2012 ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கழகம் NEET தேர்வை முன்மொழிந்தது. இது வெறும் செலவை மாத்திரம் மிச்சப்படுத்தும். 

        தனித்தனி மாநிலங்களில் நடத்தப்படும்,தனித்தனி தேர்வு முறைகளில் அனைத்து ஏழை மாணவர்களின் கற்றல் நிலைகளும், சமுதாயப் பின்னணிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதைப் பறிப்பதாக உள்ளது NEET தேர்வு முறை. 

சமமான பாடப்புத்தகங்கள் போதிக்கப்படுகின்றனவா?   

            NEET தேர்வு முறை,NCERT  பாடத்தை கணக்கில் கொண்டு நடத்தப்படுகின்றன. இந்த பாடத்திட்டம் கிட்டத்தட்ட 5-10% மாணவர்களாலே  பின்பற்றப்படுகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் அந்தந்த மாநில மாணவர்களின் திறனுக்கேற்ப மாநில பாடத்திட்டங்கள் உள்ளன. ஆகவே தற்போதுள்ள முறைப்படி NEET தேர்வை நடத்துவது சரியானதாக இருக்காது. 

செய்முறைத்தேர்வை(practical exam) NEET கணக்கில் கொள்கிறதா? 

             மாநிலத் தேர்வு முறைகளில் இயற்பியல், வேதியியல், உயிரியல் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அந்த மதிப்பெண்கள் பொதுத் தேர்வுகளில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுக்கின்றன.அந்தத் தேர்வு முறை NEET தேர்வில் இல்லாதது, அதனுடைய பிழையைக் குறிக்கும். 

மருத்துவம் என்பது சேவையாக இருக்க என்ன செய்வது? 

              வெறும் ஏட்டு அறிவை மட்டும் சோதிப்பது சேவைக்கு எவ்வளவேனும் உதவாது. ஆகவே NEET தேர்வுமுறை இல்லாமல், தமிழ்நாடே தமிழ் மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவது சரியானதாக இருக்கும். இதுவே மருத்துவராகி சேவை புரிய வேண்டும் என இருக்கும் கிராமப்புற அடித்தட்டு மாணவர்களின் கனவை நிறைவேற்றுவதாக இருக்கும்.

Post a Comment

0 Comments