கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளியின் வரலாறு | CCM Hr Sec School History

 நம்மில் அநேகர் நம்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட போது அதன் பெயர் என்னவென்று கேட்டால், சற்று யோசிக்க தான் செய்கிறோம். ஆகவே நம் பள்ளியின் வரலாற்றை அறிந்து கொள்வது இன்றியமையாததாகும்.  

இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வந்த பேராயர் ராபர்ட் கால்டுவெல் இடையன்குடிக்கு  வருவதற்கு முன்பே இடையன்குடியில் கனம் ரேனியஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பள்ளி பெயரளவிற்கு இயங்கி வந்துள்ளது.

தற்போது உள்ள  CCM மேல்நிலைப்பள்ளி  கால்டுவெல் அவர்களால் 1844 ஆம் ஆண்டு இடையன்குடியில் நடுநிலைப்பள்ளியாக நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் அதன் பெயர் CMS மிஷன் பள்ளி என்றே அழைக்கப்பட்டது. மேலும் இங்கு  வசித்து வந்த பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் இல்லாதவர்களாக இருந்தனர். பின்னர் கால்டுவெல் மற்றும் எலைசா அம்மையாரின் சீரிய முயற்சியினால் பள்ளி வருவோர் எண்ணிக்கை அதிகரித்தது. குழந்தைகளுக்கு கருப்பட்டி, கடலை மிட்டாய் கொடுக்கப்பட்டு பள்ளி வரும் ஆர்வம் தூண்டப்பட்டது. 

1862,1862 ஆம் ஆண்டு பள்ளி கட்டிட வேலை மும்முரமாக நடைபெற்றது. இதே ஆண்டுகளில் நம் இடையன்குடியில்  அநேகர் காலரா வியாதியினால் பாதிக்கப்பட்டனர். அப்போது நம் பள்ளியைச் சார்ந்த ஏறக்குறைய 95 பிள்ளைகள் இறந்து போயினர்.  மேலும் மிஷன் பணத்தில் பள்ளி கல்விக்கு செலவு செய்ய கூடாது என்று சென்னை பேராயத்தால் எதிர்ப்பு எழுந்தது. இத்தகைய பிரச்சினைகளையும் தாண்டி நம்பள்ளி வளர்ச்சி பெற்றது. 

1941 ஆம் ஆண்டு நடைபெற்ற கால்டுவெல் நூற்றாண்டு நினைவு விழாவின் போது, ஆயர் கோயில்பிள்ளை அவர்களின் முயற்ச்சியினால் 1942 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது தான் நம்பள்ளி கால்டுவெல் நூற்றாண்டு நினைவு உயர்நிலைப்பள்ளி எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1978 ஆம் ஆண்டு முதல் மேல்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

            கல்வியோடு, கடவுளைப் பற்றிய ஒழுக்க சன்மார்க்க கல்வியும் போதிக்கப்படுகிறது. எவரேனும் ஜெபிக்க விரும்பினால் தனியாக ஜெப அறை இருப்பதும் சிறப்பாகும். மாணவர்கள் திறமையை வளர்க்கத் தேவையான ஆய்வகங்கள்,  நூலகம், தோட்டக்கல்வி, விளையாட்டுத்துறை, கணினிக்கல்வி, தட்டச்சு, தொழிற்கல்வி என அனைத்து துறைகளும் இருக்கின்றன. தற்போதைய  காலநிலைக்கேற்ப இதன் தரம் இன்னும் உயர முயற்சிப்போம்.

முக்கியமாக இயேசு கிறிஸ்துவின் அன்பை, ஒழுக்கத்தை மாணவர்கள் சிறுவயதில் கண்டு கொள்வதில் பள்ளிகள் முக்கிய பங்காற்றுகின்றன. இப்பணி நம் பள்ளியின் மூலமாக மேலும் சிறக்க மேலும் முயற்சிப்போம். 

நன்றி

கிருபாசன் எட்வின்,

பழைய மாணவன் -2012,

9789112199






Post a Comment

0 Comments