சேரி என்ற பதம் சரியாக இருக்காது என்பதால், எளிய சிறுகுடிசை பகுதிகள் என்று அழைக்கலாம். மும்பை தாராவி மற்றும் புனே எளிய சிறுகுடிசை பகுதிகளை பார்வையிட்ட போது மனதில் தோன்றிய காரியங்கள்.
இந்தியாவின் மிக முக்கியமான ஐந்து நகரங்களாக கருதப்படும் மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூர், கொல்கத்தா ஆகிய இடங்களில் சராசரியாக இருபது சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இன்னும் சிறுகுடிசை பகுதிகளில் வசித்து வருகின்றனர். இங்குள்ள பகுதிகளைப் பற்றி பார்க்கும்போது ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் ஏராளமான மக்கள் காற்றோட்ட வசதியற்ற, கால்வாய்களற்ற, குடிதண்ணீர் பற்றாக்குறையுள்ள, மருத்துவ வசதியற்ற, ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் வாழ்ந்தது வருகின்றனர்.
தற்போதுள்ள நவீன யுகத்தில் ஒருபுறம் அறிவியலும், தொழில்நுட்பமும், கட்டிடங்களும் வளர்ந்துவரும் நிலையில், மறுபுறம் இவர்கள் கவனிப்பாரற்று புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
தீர்வு என்ன?
எல்லாரையும் நேசிக்கக்கூடிய, உதவி செய்யக்கூடிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை, இரட்சிப்பை அறிவிப்பது தீர்வாக அமையும். இது அவர்களின் வாழ்க்கை முறையையும் எண்ணத்தையும் மாற்றும். மேலும் இதோடு கல்வியும் மருத்துவமும் சேர்த்து வழங்கப்படும் போது அவர்களாகவே வாழ்க்கை முறையை கர்த்தரின் துனையோடு மாற்றிக்கொள்ள முடியும்.
For correction: 9789112199
0 Comments
Pray God, Believe Jesus Christ and read bible