How bible translated into bengal language | வங்காள வேதாகம மொழிபெயர்ப்பு வரலாறு

        வங்காள மொழியில் வேதாகம மொழிபெயர்ப்பு  டாக்டர் ஜான்தாமஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் மத்தேயு சுவிசேஷத்தை மாத்திரம் மொழிபெயர்த்து, அதை கையெழுத்துப் பிரதியாக வெளியிட்டார்.     



         பாப்திஸ்து சங்க முதல் மிஷ்னெரியாக 1793 ஆம் ஆண்டு வில்லியம் கேரி இந்தியாவிலுள்ள கல்கத்தா வந்திரங்கினார். இவர் 1800 ஆம் ஆண்டுக்குள் புதிய ஏற்பாடு முழுவதையும் மற்றும் பழைய ஏற்பாட்டில் இரண்டு புத்தகம் தவிர மற்ற அனைத்து புத்தகங்களையும்  வங்காள மொழியில் மொழிபெயர்த்தார். இருப்பினும் அச்சிடப்படுவதற்கு தேவையான அச்சு எழுத்துக்கள், அச்சுத் தாள்கள், அச்சுத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் இல்லாததால் காத்து கொண்டிருந்தார்.

        வில்லியம் கேரி மத்தனம்பட்டியில் (கல்கத்தாவில் உள்ள பகுதி) இருக்கும்போது 40 பவுன் கொடுத்து மர அச்சு இயந்திரம் வாங்கி இருந்தார். பின்பு அச்சுக்கலையில் வல்லவரான வில்லியம் வார்ட் என்பவர் இங்கிலாந்தில் இருக்கும் போது வில்லியம் கேரியின் நற்செய்திப்பணி கண்டு, அவருக்கு உதவியாக இந்தியா வந்து சேர்ந்தார். அவர் சாகும் வரை வேதாக அச்சடிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அச்செழுத்து அமைப்பதற்கு ஒரு நிபுணர் தேவைப்பட்டபோது பஞ்சானனா என்ற வார்ப்பாளன் வந்து சேர்ந்து கொண்டான். 

        இவ்வாறு அனைத்து தேவைகளும் வாய்க்கப்பெற்றதால் வேதாகம அச்சடிக்கும் பணி வில்லியம் வாட் துணையோடு செராம்பூரில் ஆரம்பிக்கப்பட்டு, 1801 ஆம் ஆண்டு மார்ச் 5 ல் பிரதிஷ்டை செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அப்போது 2000 பிரதிகள் வெளியிடப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

        பின்பு 1802 ல் மோசேயின் ஆகமங்களும் நீதிமொழியும், 1803 ல் சங்கீதமும் உன்னதப்பாட்டும், 1804 ல் முழு வேதாகமும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. வேதப்புத்தகம் தான் வங்காள மொழியில் அச்சிட்டு வெளியிடப்பெற்ற முதல் உரைநடை நூல்.

பின்பு திருத்தங்கள் பல செய்யப்பட்டு மறுபதிப்புகள் வெளியிடப்பட்டன. வேறு சில மொழிபெயர்ப்புகள் வந்திருந்தாலும் வில்லியம் கேரியின் மொழிபெயர்ப்பு இன்றளவும் வங்காள மொழி பேசும் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

தேவ சத்தத்தை அனுதினமும் நாம் கேட்ப்பதற்கு தேவன் தந்திருக்கும் வார்த்தை வேதப்புத்தகமே.

----------------------------------------------------------------------

நீங்கள் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள் - 1 பேதுரு 2;3

-----------------------------------------------------------------------



        

Post a Comment

0 Comments